தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் நிலமை தோற்றுவிக்கப்பட வேண்டும் பொங்கல் வாழ்த்து செய்தியில் மாவை சேனாதிராஜா TNA

314

 

தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லை! கலந்து கொண்டமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி

தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் நிலமை தோற்றுவிக்கப்பட வேண்டும் பொங்கல் வாழ்த்து செய்தியில் மாவை சேனாதிராஜா TNA

Posted by Thinappuyalnews on Friday, 15 January 2016

தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனால் பலாலி – கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவில் கலந்து நாங்கள் கலந்து கொண்டமைக்கு காரணம், எங்கள் நிலத்தை எங்களிடம் கொடுங்கள் எனக்கேட்பதற்கே.

மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று பலாலி- கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வலி. வடக்கு உயர்பா துகாப்பு வலயத்திற்குள் 6831 ஏக்கர் நிலத்தை படையினர் வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மிகுதி நிலங்களையும், குறிப்பாக இந்த ஆலயத்தைப் போன்று உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் ஆலயங்கள், தேவாலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்ட வண்ணமிருக்கிறோம்.

இதற்காகவே நாங்கள் இந்த நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கின்றோம்.

மேலும் நாங்கள் தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை.  அதற்கு எமக்கு விரும்பமில்லை.

காரணம் வடகிழக்கு தமி ழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் மீள்குடியேற்றம் பூர்த்தியாக்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

எனவே இவ்வாறான நிலையில் நாம் தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு விருப்பமற்றவர்களாக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE