தமிழ் மொழியில் பேசுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை! சீ.வி ஆதங்கம்

179

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மொழியில் நாடாளுமன்றில்பேசுவதனால் எவ்வித பயனும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஏனைய உறுப்பினர்களுக்கு புரிவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியிலேயே நாடாளுமன்றில் உரையாற்றுகின்றனர்.

தமிழ் மொழி புரியாத சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிப்பெயர்ப்புகளுக்கு உரிய முறையில் செவி கொடுப்பதில்லை. மிகவும் அரிதாகவே செவி கொடுக்கின்றனர்.

ஆங்கில மொழி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிவதில்லை. இதன் காரணமாக வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்களின் அடிமட்டப் பிரச்சினைகள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிவதில்லை.

இந்நிலையில், பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டிய அமைச்சர்களுக்கு அந்த பிரச்சினை உரிய முறையில் சென்றடைவதில்லை” என முதலமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE