தல 57 எப்போது தொடங்குகிறது? ரிலீஸ் எப்போது?

190

தல 57 எப்போது தொடங்குகிறது? ரிலீஸ் எப்போது? - Cineulagam

தல நடித்த வேதாளம் படம் நவம்பர் மாதம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து மறுபடியும் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம்.

இந்த புதிய படத்துடைய பூஜை மே 1ம் தேதியே போடப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜுன் அல்லது ஜுலை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், பட காட்சிகள் அனைத்தும் ஈரோப்பில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு படம் அடுத்த வருடம் ஏப்ரல் 12ம் தேதி தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.

SHARE