தாதியர் பிரச்சினை தொடர்பில் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்கின்றார் வடமாகாண சுகாதார அமைச்சர் – சத்தியலிங்கம்

660

நாடளாவிய ரீதியில் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வடமாகாணசபை சுதாதாரத்துறை அமைச்சர் என்கின்ற வகையில் நான் கூறிக்கொள்ளும் விடயம் என்னவென்றால், தாதியர் பயிற்சி வழங்குவது நல்லது. குழந்தைகள் பிறக்கின்ற பகுதிகளில் கடமையாற்றுபவர்களுக்கு பயிற்சி முக்கியமானது. அவை தொடர்பான பயிற்சிகள் தாதியர்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் தாதியர் பயிற்சிகளை முடித்த அனைவருக்கும் இந்த பயிற்சிகளை வழங்குவது நல்லவிடயமல்ல. ஏனென்றால் காரணம் எல்லோரும் குழந்தைகள் பிறக்கும் பகுதிகளில் தான் பணியாற்றுவார்கள் என்று அல்ல. அவர்கள் வேறு இடங்களிலும் கடமையாற்றக்கூடும். வேறு இடங்களில் கடமையாற்றுபவர்களுக்கு அவசரமாக பயிற்சிகளை வழங்கவேண்டியது இல்லை என்பதைதான் நான் கூறுகின்றேன்.

எல்லாத் தாதியர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்குவது நல்லது. ஆயினும் வெளிநாட்டு முறையின் படி அவரவர் எந்தெந்த பகுதியை தெரிவு செய்வது என்பது அவர்களுடைய விருப்பமாகும். இந்த குழந்தை பிறப்புச்சம்பவத்தில் எல்லோருக்கும் பயிற்சிநெறிகள் சரியாக அமைவதில்லை. தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்ற தாதியர்கள் எல்லோருக்கும் இந்த பயிற்சிகளை வழங்குவதனூடாக அவர்களுக்கு ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படுமா என்று கேட்டதற்கு, அப்படித்தான் அவர்கள் எங்களுடன் உரையாடும் போது கூறுகின்றார்கள். எல்லாத் தாதியர்களுக்கும் பயிற்சிகளை வழங்குகின்றபொழுது தங்களுக்கு வேலை இல்லாமல் போகும் என்று நினைக்கலாம். ஆனால் இவ்விடயம் உடனடியாக நடக்கக்கூடிய சாத்தியம் இல்லை. நான் நினைக்கின்றேன் பெரும்பான்மையான வைத்தியர்கள் கூட இவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு கூடிய விருப்பம் செலுத்துவார்களென்று. நாங்களும் இவ்விடயம் தொடர்பில் உரிய இடங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதனால் பாதிக்கப்படப்போகிறவர்கள் பொதுமக்களே. தாதியர் சேவை என்பது உண்மையில் மக்களோடு ஒன்றித்துப்போயுள்ளதொன்று. இதனை தீர்ப்பதற்கு எம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். இதற்கு இரு தாதியர் தாய் சங்கங்களும் கொழும்பில் ஒரு முடிவை எடுக்கவிருக்கின்றன என்று அறிந்திருக்கின்றோம். இன்றும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் நிறைவடையும். ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். வடபகுதிகளில் போதிய தாதியர் இல்லை. இதற்கு மேலதிகமாக தாதியரை வைத்துக்கொண்டுதான் இந்த குழந்தை பிறக்கும் பகுதிக்கு தாதியர்களை பணிக்கு அமர்த்தவேண்டும். இது அரசின் நீண்ட திட்டம். இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தொடருமானால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும். அதற்கான முடிவு உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE