தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது.

289

 

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

dsc_0689 Karuna-And-Pillaiyan Pillaiyan-Gotabhaya

கடந்த காலங்களில் இவர் செய்த படு கொலைகள் கடத்தல்கள் கப்பம் பெறல் தொடர்பில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறும் விசாரணையாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த பின்னர் இடம் பெற்ற பாாிய சம்பவங்கள் அனைத்தும் இவரால் வழிநடத்தப்பட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவ் அதிகாரி குறிப்பிட்டதாக கூறம் JVPNEWS செய்தியின் புலுனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

பிள்ளையான் குழு செய்த படுகொலை

பிள்ளையான்குழுவினர் திருகோணமலையில் 2009 மார்ச் 11ஆம் திகதி 6வயது மாணவியான வர்ஜா யூட்றெஜி என்ற சிறுமியை கடத்திச்சென்று படுகொலை செய்தனர். இச்சிறுமியின் சடலம் பின்னர் மூன்று தினங்களில் சாக்கு ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பிள்ளையான் குழுவைச்சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இக்கொலையை தாங்களே செய்ததாக ஒப்புக்கொண்டனர். இக்கொலையை கிழக்கு முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் உத்தரவின் பேரிலேயே செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

பிள்ளையான் போன்ற மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமானவர்கள் இக்கொலையின் பின்னணியில் இருந்த விடயம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இக்கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் அக்கொலை வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது.

மட்டக்களப்பில் பச்சிளம் சிறுமி படுகொலை

இதேபோன்று மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் என்ற மாணவி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். கடத்தி சென்றவர்கள் இவரின் தாயிடம் 30இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியிருந்தனர்.

இம்மாணவின் தந்தையை(சதீஸ்குமார் சந்திரராசா) இதற்கு முன் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணாகுழுவினர் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தனர்.

தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த படுகொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர் புளொட் மோகன்குழுவைச்சேர்ந்த ரதீஸ்குமார் என்பவர் என்றும் இவர் பின்னர் கருணாகுழுவுடன் சேர்ந்து இயங்கி வந்தார்.

இவர் மட்டக்களப்பு இராணுவ புனலாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் நிஜாம் முத்தலிப் என்ற இராணுவ அதிகாரிக்கு கீழ் இயங்கி வந்தனர். இந்த மாணவியின் கடத்தல் மற்றும் படுகொலைகளில் கருணா பிள்ளையான் குழுக்கள் மட்டுமன்றி சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சிறுமியின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக கந்தசாமி ரதீஸ்குமார் என்பவர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையின் பின்னணியில் இருந்தவர்களின் விபரங்கள் அம்பலத்திற்கு வராமல் இருப்பதற்காக இந்த நான்கு பேரும் பின்னர் ஊறணியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த சிறுமியின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு இருந்தது.

தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் கடத்தி படுகொலை

2006ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு கணக்கியல் பயிற்சி ஒன்றிற்காக சென்ற மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்களை வெலிக்கந்தையில் வைத்து பிள்ளையான் கருணா குழு ( அப்போது இருதரப்பும் ஒன்றாகவே இருந்தனர்) வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வு கழக தலைமை கணக்காளர் தனுஷ்கோடி, பிறேமினி, சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராசா வசந்தராசா, கலையாப்பிள்ளை ரவீந்திரன், உட்பட 10பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கடத்தி செல்லப்பட்ட பெண் பணியாளர்கள் பிள்ளையான் உட்பட காடையர் குழுவால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை

இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இக்கடத்தலையும் கொலையையும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர் இக்கடத்தல் குற்றச்சாட்டை இருவரும் ஒருவரை ஒருவர் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கடத்தலுக்கு முதல் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பால சுகுமாரை கடத்தி சென்ற கருணா தலைமையிலான பிள்ளையான் ரவீந்திரநாத் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விடுவித்திருந்தனர்.

இது தவிர கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன், உட்பட பெருந்தொகையான புத்திஜீவிகளையும் கொலைகார ஈனப்பிறவிகளான பிள்ளையானும் கருணாவும் கொலை செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை தேவாலயத்திற்குள் வைத்தே தொழுகையின் போதே படுகொலை செய்ய படுபாதகத்தை செய்தவர்கள் கருணா குழுவினராவார்.

SHARE