திருட்டு டிவிடி விவகாரம்! மீண்டும் வேட்டை​யில் இறங்கிய விஷால்

202

திருட்டு டிவிடி விவகாரம்! மீண்டும் வேட்டையில் இறங்கிய விஷால் - Cineulagam

சென்ற வாரம்தான் ஒரு தனியார் பேருந்தில் தெறி திரைப்படம் திருட்டு டிவிடி பயன்படுத்தி ஒளிபரப்பியதால் பேருந்து ஓட்டுனரை அதிரடியாக கைது செய்தனர். அது போல மீண்டும் இன்று ஒரு தனியார் பேருந்து பிடிபட்டுள்ளது.

நேற்று இரவு அவினாசியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த CJS – BSS வண்டி எண் TN37AH7997 என்ற தனியார் பஸ்ஸில் புத்தம் புது திரைப்படமான ‘மனிதன்’ திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர் சங்க பொது செயலாளர் ‘விஷாலு’க்கு தெரியப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து விஷாலின் புகாரின் அடிப்படையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஜெயலட்சுமி IPS அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று பஸ்ஸை மடக்கி பிடித்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE