திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்? போராட்டத்தில் குதித்த 50 பேர்

154

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து 50 பேர் போராட்டம் செய்துள்ளனர்.

சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக, அந்நாட்டை சேர்ந்த குர்திஷ் குடும்பத்தினர் கடந்த வருடம் Balkans ஐரோப்பிய எல்லை வாயிலாக சுவிட்சர்லாந்திற்கு புகலிடம் கோரி வந்துள்ளனர்.

இவர்களின் உறவினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்த காரணத்தால் அவர்களது வீட்டில் தங்கியதோடு மட்டுமல்லாமல், புகலிடம் கோரி விண்ணப்பத்தினையும் பாதுகாப்பு துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இக்குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவலையடுத்து சிரியா புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து 50 நபர்கள் ஜெனிவா பாதுகாப்பு துறையின் முன்பு, பதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டம் செய்துள்ளனர்.

மேலும் இது மோசடியானது மட்டுமல்லாமல் மோசமான அணுகுமுறை என பசுமை தேசிய கவுன்சில் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு துறை மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE