திருமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்க இரகசிய ஒப்பந்தம்

177

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இரகசியமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்திர் கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் காலணித்துவ நாடாக இலங்கையை மீண்டும் கொண்டு செல்ல முயற்சிகள் இடம்பெறுகின்றன.

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்குவதற்கு தேவையான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அமெரிக்கா தனது விஸ்தரிப்பை இலங்கையில் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான விடயங்களினால் தேசிய பாதுகாப்பு , இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகி விட்டுள்ளது.

அரசாங்கம் இவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாது தன்னிச்சையாக செயற்பட்டு நாட்டை பேராபத்தில் தள்ளிவிட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.trincomalee

SHARE