திரும்ப வருவேன்னு சொல்லு.சாய்னா நேவால் நம்பிக்கை

163

625-0-560-350-160-300-053-800-668-160-90-3

சமீப காலமாக தோல்வி முகத்துடன் இருக்கும் இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், தான் மீண்டும் பழைய பலத்துடன் நிச்சயம் திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தன் முழங்கால் பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட சாய்னா தற்போது ஒய்வில் இருக்கிறார்.

இதனிடையே சாய்னா நேவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எப்படி கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நல்ல உடல் தகுதியுடன் விளையாடினேனோ அதே போல் வரும் காலத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். இந்த தோல்விகளிருந்து விரைவில் மீளுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் சாய்னா முதல் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE