தெஹியோவிட்ட காயத்திரி தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறப்பு

115
கேலாலை மாவட்டம் தெஹியோவிட்ட காயத்திரி தமிழ் வித்தியாலயத்திற்கு 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை மலையக மக்கள் முன்னணியின் தவைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்தக் கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
பாடசாலையின்  அதிபர் பி.சிவஞானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்திற்கு  கௌரவ அதிதிகளாக கேகாலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜித் பெரேரா ஐக்கியதேசிய கட்சியின் ருவன்வெல்ல தொகுதி அமைப்பாளர் துஸித்தா விஜயமான கல்வி இராஜாங்க அமைச்சரின் கேகாலை மாவட்ட இணைப்பாளர் ஜெகநாதன்   தெஹியோவிட்ட கல்வி பணிமனை பணிப்பாளர் எம்.விமலாவதி தமிழ்மொழிப் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் இனாயா புர்க்கான்  கோட்டக்கல்வி பணிப்பாளர் விஜயரத்ன  சப்ரகமுவ மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நிஹால் பாரூக்  உட்பட  அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  கலந்துகொண்டனர்.
     
  
  
SHARE