தேசியத்தலைவர் பல நாடுகளின் பாதுகாப்புடன் வந்து இலங்கையில் இறங்கி தமிழீழத்தை நிறுவுவார்

135

 

சட்டம் ஒழுங்கு யார் பொறுப்பில் உள்ளது? கொழும்பில் பிரதான சன நடமாட்டம் கூடிய செட்டியார் தெருவில் இன்று காலை ஒரு சூட்டுச்சம்பவம் நடந்திருக்கிறது. தமிழ் இளம் அரசியல்வாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அரச பயங்கரவாதம் மீண்டும் துளிர்விடுகிறதோ என்ற அச்சம் அனைவர் மனங்களிலும் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது. தமிழீழத்திற்கு சார்பாகவோ, விடுதலைப் புலிகளை ஞாபகப்படுத்தியோ எவனாவது அரசியல் பண்ண நினைத்தால் அவர்களுக்கும் இந்த நிலமைதான் ஏற்படும் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறது இச்சம்பவம்.

விஜயகலாவின் ராஜதந்திர அரசியல் நகர்வு அவருடைய உயிருக்கு உலைவைக்குமளவிற்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் தனது பிரத்தியேக பாதுகாப்பை சற்று பலப்படுத்திக் கொள்வது சிறப்பு. சைக்கிள் கட்சியினர் விஜயகலாவை வடக்கின் அடுத்த முதலமைச்சராக்குவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்துவந்த தருணத்தில் விஜயகலாவின் பிரபாகரன் தொடர்பான அண்மைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த பேரினவாதிகளையும் நிலைதடுமாற வைத்தது விஜயகலா எதிர்பார்த்திருக்காத ஒன்று என்றாலும் அதற்குப் பின்னர் தமிழர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வலைகள் சற்று பலமாக காணப்படவே விஜயகலாவின் இரண்டாவது பேச்சும் அமைந்திருந்தது. எப்படியும் ஐதே கட்சியின் அமைச்சராக இருந்து ஒரு மசிரயும் புடுங்க முடியாதென்பது விஜயகலா சைக்கிளில் ஏறி சவாரி செய்வதற்கான பிரதான காரணமாக இருந்தாலும், விஜயகலாவிடம் காசு இருக்கிறது. எப்போதும் மக்கள் செல்வாக்கு இருப்பவர்களைவிட கோடீஸ்வரர்களாக இருந்தால்தான் எந்த கட்சியும் அவர்களை உள்வாங்கிக் கொள்ளும். அந்த வகையில் விஜயகலாவின் சீசன் டிக்கட்டில் சைக்கிள் தனது பயணத்தை தொடர இருக்கிறது. எதற்கும் மண்டைகளை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிரபாகரனைப்பற்றி நேரத்திற்கு நேரம் உணர்சிவசப்பட்டு பேசிப்பேசி தமிழ் மக்களை இன்னுமின்னும் ஏமாற்ற முடியாது. யுத்தத்தைப்பற்றி கேள்விப்பட்டவர்களை விட யுத்தத்தில் நேரடியாக பங்குபற்றி தப்பிப் பிழைத்தவர்களுக்குத்தான் யுத்தத்தின் கோரம் எப்படிப்பட்ட கொடியதென்பது புரிந்திருக்கும். இனிமேல் எந்த ஜென்மத்திலும் யுத்தம் என்ற ஒன்று ஆரம்பிப்பதற்கு தமிழர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை அண்மையில் வடக்கில் ஆயுதங்களுடன் பிடிபட்ட நபர்களை பாதுகாப்பு தரப்பிற்கு காட்டிக்கொடுத்ததிலிருந்து உணரமுடிகிறது.

நாடுகடந்த தமிழீழம் என்ற மாயையை ஏற்படுத்தி காலாட்டி காலாட்டி உடம்பு வளர்த்துக் கொண்டிருக்கும் அண்ணாவிமாரால் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் எந்த தேசத்தோடு பேசியும் யுத்த குற்றங்களுக்கோ இன அழிப்பிற்கோ எந்தவிதமான வலுவான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமல்தானே போய்விட்டது. அவற்றை சீர்தூக்கிப்பார்த்து இனியும் தீர்வினைப்பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த தமிழர்களாடமிருந்து இயல்பாகவே மறைந்துவிட்டது. வெளிநாடுகளில் இருக்கும் புலிப்பினாமிகளுக்கு இலங்கையில் மீண்டும் கலவரம் யுத்தம் ஆரம்பிக்க வேண்டுமென்பது கனவு. அந்த கனவு நனவானால்தான் மீண்டுமொரு பண வசூலிப்பில் இறங்கமுடியும். கோடிகோடியாய் வெளிநாட்டு கரன்சியை சுருட்டி முன்னய ஆட்சியாளர்களுக்கும் பங்கிட்டுவிட்டு தற்போது வன்னியில் ஓர் ஓரமாக வட்டிப்பணத்தில் சல்லாபம் பண்ணிக் கொண்டிருக்கிறார் கேபி என்ற குமரன் பத்மநாதன். இப்படி எத்தனையோ கேபீக்கள் உலகம் பூராவும் இருக்கானுகள் புலிப்பணத்தில் பீட்சா பேகர் சாப்பிட்டுக் கொண்டு. அவனுகள் பேசுவானுகள், மிகவும் அழகாக உணர்வு பொங்கி பேசுவானுகள் தமிழீழம் என்பானுகள், தேசியத்தலைவர் என்பானுகள், தேசியத்தலைவர் பல நாடுகளின் பாதுகாப்புடன் வந்து இலங்கையில் இறங்கி தமிழீழத்தை நிறுவுவார் என்று முகநூலில் போடுவானுகள். ஆனால் இவை எதற்குமே தமிழர்கள் இனிமேல் மசியப்போவதில்லை காரணம் உண்மை என்ன என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

தான் உழைத்தால்தான் தனக்கு சாப்பாடு, இன்று வடக்கில் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை சில கிராமங்களில். ஒழுங்கான பாதைகள் இல்லை, பலர் காடுகளில் விறகுவெட்டி ஒருநேர சோற்றைப் பார்க்கின்றனர். புலிகளில் இருந்தவர்கள் என்ற காரணத்தினால் எத்தனையோ போராளிகளின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி மன உழைச்சலுக்காகி நிர்க்கதியாகி நிற்கின்றனர். நிரந்தர வீடுகள் இல்லாமல் ஓலைக்குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் வாழ்கின்றனர் அதேசமயம் அதே ஊரிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் தஸ்சு புஸ்சு என்று இங்கிலீஸில் கதைத்து ஏழனமாக பார்க்கின்றனர் ஏதோ அவங்க கொம்மைமார் வெள்ளைக்காரனுக்கு முந்தானை விரிச்சமாதிரி!

இதனால்தான் இன்றைய இளைஞர்கள் புதியதொரு மாற்றத்தை நோக்கி நகர்கின்றனர் ஆனால் அது யுத்தமல்ல, ஒவ்வொருவருக்கும் அவரவர் கல்வித்தகமைகளுக்கு ஏற்றமாதிரி தொழிற்துறைகள் ஏற்படுத்தித்தரவேண்டும், ஒவ்வொரு கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும், தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்ட வேண்டும். இளைஞர்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை அமைய வேண்டும். இதுதான் இன்றைய ஒவ்வொரு இளைஞனின் எதிர்பார்ப்பாகும்.

SHARE