தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம்

295
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால, இன்று சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பேச உள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட சில முக்கிய அரச அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்தல், இம்முறை பொதுத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ஏற்கனவே ஜனாதிபதியும் தேர்தல் ஆணையாளரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறைமையில் மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தேவையற்ற அதிகாரங்களை குறைத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது, பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

SHARE