த்ரிஷாவின் எதிர்பார்ப்பு – கார்த்திக் சுப்பாராஜ் நிறைவேற்றுவாரா?

133

தமிழ் சினிமாவில் 18 வருடத்துக்கும் மேல் கதாநாயகியாக தாக்குப்பிடித்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஆனால் இவருக்கு ஒரு மிகப்பெரிய குறை சினிமாவில் உள்ளது.

அஜித் விஜய் முதல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவீட்டார், ஆனால் இன்னும் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கவில்லை என்பது தான் அந்த குறை. ரஜினியின் ஒவ்வொவரு புதிய படங்கள் தொடங்கும் போது கதாநாயகி வேடத்துக்கு த்ரிஷாவின் பெயர் அடிபடுவது சகஜம்.

இந்நிலையில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கப்போகும் ரஜினிகாந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார் திரிஷா. எப்படியாவது இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளாராம். ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் மனசுவைக்கவேண்டும் அல்லவா, இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தனது விருப்பை தெரிவித்துள்ளதாக தகவல் அடிபடுகிறது.

SHARE