நஞ்சூட்டிய மொசாட் உளவாளிகள்!

179

625.500.560.350.160.300.053.800.900.160.90

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உயிரிழப்புக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமையே காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பும் வெளியிடப்படுகின்றது.

எனினும், இதனை ஒத்த சம்பவங்கள் சில வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அதில் காலித் மசால் என்ற ஹமாஸ் இயக்கத்தின் தலைவரை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கொலை செய்ய முற்பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம்.

இந்த சம்பவம் 1977ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களை மொசாட் இலக்கு வைத்தது. இதனால் அவர்கள் மறைந்து வாழ நேரிட்டது.

காலித் மசால் அவ்வாறு மறைவாக ஜோர்தானில் இருந்தபோது, மொசாட் உளவாளிகள் அதனை அறிந்து இரண்டு உளவாளிகளை கனேடிய நுழைவுச் சீட்டு மூலம் அனுப்பியது.

இந்நிலையில், காலித் மசால் அம்மானிலுள்ள ஹமாஸின் அலுவலகத்திற்கு நடந்து செல்கையில் உளவாளிகள் காலித் மசாலின் காது வழியாக விரைவாகச் செயற்படும் விஷத்தினை செலுத்தியுள்ளார்.

எனினும், குறித்த இரண்டு உளவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அத்துடன் ஜோர்தான் இஸ்ரேலிடம் நஞ்சை செயலிழக்கச் செய்யும் மாற்று மருந்தைக் கேட்டது.

மாற்று மருந்தை சொல்லா விட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முறிவதோடு, பிடிபட்ட இரு உளவாளிகளும் தடுத்து வைக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தது.

இஸ்ரேல் முதலில் மறுத்தது. ஆயினும் அமெரிக்கா கேட்டுக் கொண்டதன்படி, இஸ்ரேல் மாற்று மருந்தை அனுப்பியது. இதனால், ஹமாஸ் இயக்கத் தலைவர் உயிர் பிழைத்ததோடு, இரு மொசாட் உளவாளிகளும் விடுவிக்கப்பட்டனர்.

SHARE