நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபு

58
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் இறந்தனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு கொரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு புதிய வகை கொரோனா வைரஸான எக்ஸ்பிபி1.16 என்ற திரிபுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

எக்ஸ்பிபி வைரஸ் என்பதுஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ் களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந் துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸின் மரபணு மாற்றமான எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்பரவி வருகிறது என்று மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் தான் தற்போது நிறைய பேரை பாதித்து வருகிறது.

SHARE