நாயை கண்டு அஞ்சாத குட்டி இளவரசி என்ன செய்தார் தெரியுமா?

396

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

கனடா நாட்டில் பெற்றோருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குட்டி இளவரசி நாய் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து குதித்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் தங்களது இரு பிள்ளைகளுடன் கனடா நாட்டிற்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்று கனடா நாட்டிற்கு வந்த அரசு குடும்பத்தினரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்நிலையில், பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள விக்டோரியா நகரில் நேற்று அரசு குடும்பத்தினருக்கு விருந்து நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியுள்ளது.

அப்போது, வெள்ளை நிற மிரட்டு நாய் ஒன்று நிலத்தில் படுத்திருக்க அங்கு குட்டி இளவரசியான சார்லோட் சென்றுள்ளார்.

பின்னர், சற்றும் அச்சப்படாத குட்டி இளவரசி நாய் முதுகில் ஏறி அமர்ந்து உற்சாகத்துடன் குதித்துள்ளார்.

இக்காட்சியை கண்ட அனைவரும் வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர், பூங்காவில் கட்டியிருந்த பலூன்களை வெடித்து குட்டி இளவரசி சார்லோட் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடா நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொது நிகழ்ச்சியில் குட்டி இளவரசி மற்றும் இளவரசர் ஜோர்ஜ் முதன் முதலாக ஒன்றாக கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE