நியூசிலாந்து கிரீன் கட்சியினால் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

261
நியூசிலாந்து கட்சியொன்றில் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  நியூசிலாந்தின் கிரீன் கட்சியினால் இவ்வாறு இலங்கை குறித்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையை இரண்டாக பிளவடையச் செய்து தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரி இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களாக நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நியூசிலாந்து கிரீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெதரின் டியானன்டினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், கிரீன் கட்சி தலைவர்களை சந்தித்து இந்த தீர்மானங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக நியூசிலாந்து வாழ் இலங்கையர்கள் குறிப்பிட்டதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE