நிருபரிடம் கோபமாக பேசிய கபில்தேவ் எதனால்?

146

உலக கபடிப் போட்டி குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர் ஒருவர் உலகக் கிண்ண கபடி போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்டபோது கபில்தேவ் அவரிடம் கோபமாக பேசினார்.

அகமதாபாத் நகரில் அக்டோபர் 7 ஆம் திகதி உலக கபடி போட்டி நடைபெறவுள்ளது.

இது குறித்து மும்பையில் செய்தியாளர்களின் கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் கபில்தேவ் கலந்துக் கொண்டார்.

அப்போது அந்தக் கூட்டத்தில் நிருபர் ஒருவர் கபடி போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்டார்.

அதற்கு நீங்கள் இந்தியன்தானே இந்தியராக இருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள், எந்த நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் அரசிடம் விட்டு விடுவோம்.விளையாட்டு வீரர்கள் விளையாட்டை மட்டுமே பார்க்க வேண்டும். என்று கோபத்துடன் கபில்தேவ் பேசினார்.

இந்த கூட்ட நிகழ்ச்சியின் போது, இந்திய அணியினரின் சீருடையை கபில்தேவ் வெளியிட்டார்.

இதற்கு முன்பு 2004 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும் இந்தியா உட்பட 12 அணிகள் இந்த உலகக் கிண்ண கபடித் தொடரில் கலந்து கொள்ள உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

SHARE