நுரையீரல் இல்லாமல் வாழ்ந்து வந்த அதிசய பெண்..! கனடா மருத்துவர்களின் புதிய சாதனை

172

 

கனடாவில் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், வாழ்ந்து வந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.

ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், வாழ்ந்து வந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி இருப்பது இதுவே உலக அளவில் முதன்முறை என்று கூறப்படுகிறது.

கனடாவைச் சேர்ந்தவர் Melissa Benoit. இவருக்கு சமீபகாலமாக நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் கனடாவின் Toronto General மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் Melissa Benoit ஐ சோதனை செய்து பார்த்ததில் நுரையீரலில் சுவாச கோளாறு இருந்துள்ளது. அதுமட்டுமின்றி சளியும் அதிகம் இருந்துள்ளது.

இனியும் அவர் அதற்கான உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தொடந்து அதற்கான சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் அதற்கு பலன் இல்லை. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே இவர் உயிர் பிழைக்க முடியும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதனால் அவர்கள் நுரையீரலுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் Melissa வின் நுரையீரல் செயல் இழக்கத்தொடங்கியுள்ளது.

இதனால் அவர் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அடுத்தடுத்து செயல் இழந்து வந்துள்ளன. இதனால் மருத்துவர்கள் உடனடியாக நுரையீரலை வெளியில் எடுத்தால் மட்டுமே இவரை காப்பாற்ற முடியும், ஆனால் அதற்கு மாற்று நுரையீரல் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நுரையீரல் கிடைக்காததால் மருத்துவர்கள் இவரை காப்பாற்ற வேண்டும் என்றால் நுரையீரல் வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக செயற்கை நுரையீரல் சுவாச கருவி கொடுத்து காப்பாற்றிவிடலாம் என்று நினைத்துள்ளனர்.

அது சரி என்றாலும் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு நுரையீரல் கிடைப்பதற்கு நாட்கள் பல ஆகினால் என்ன செய்வது என்று அச்சமடைந்துள்ளனர். அதன் பின்னர் எது நடந்தாலும் சரி என்று நுரையீரலை வெளியில் எடுத்துள்ளனர். அதன் முழுவதும் சளி அடைத்துக் கொண்டு ஒரு கால்பந்து போல் கெட்டியாக இருந்துள்ளது.

அதன் பின்னர் செயற்கை நுரையீரல் சுவாச கருவி மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆறு நாட்களுக்கு பின்னர் அவருக்கு மாற்று நுரையீரல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நுரையீரல் வைத்துள்ளனர்.

தற்போது அவர் மிகுந்த நலத்துடன் இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்ததாகவும், இதன் முழு வெற்றிக்கு Melissa வின் தன்னம்பிக்கை தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE