நூதன முறையில் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் கைதி!

191

two-women-arrested-in-kuwait-for-prostitution_0_16-04-12-07-04-55

இந்தோனேசியாவில் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இஸ்லாமிய பெண்கள் போன்று உடை அணித்து சிறையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் பள்ளி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துவந்தவர் அன்வர்.

இவரை சந்திக்க அடிக்கடி இவரது மனைவி வந்து போவது வழக்கம். இதனிடையே இஸ்லாமிய பெண்கள் பயன்படுத்தும் கறுப்பு அங்கி மற்றும் முகத்திரையுடன் சிறை காவலர்கள் கண்டிருக்கவே அன்வர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

சிறைக்கு அடிக்கடி வந்து போகும் தமது மனைவியின் உடைகளை அன்வர் பெற்று பத்திரப்படுத்தி வைத்திருந்துள்ளார். முகத்திரையுடன் கண்களுக்கு கண்ணாடியும் அணிந்திருந்ததால் சந்தேகத்திற்கு இடமளிக்காதவகையில் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனிடையே தப்பிய கைதியின் அறையில் இருந்து அவரது சிறை உடைகளை கண்டெடுத்த அதிகாரிகள், அன்வர் தப்பியதை உறுதி செய்தனர்.

கண்காணிப்பு கமெராக்களில் பதிந்திருந்த காட்சிகளை வைத்து பெண் வேடமிட்டு தப்பியுள்ளது அன்வர் என உறுதி செய்துள்ள பொலிசார் தற்போது தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் அன்வர் தப்புவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவரது மனைவியை அழைத்து விசாரித்த பொலிசார், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை விடுவித்தனர்.

குறித்த குற்றவாளியை தேடும்பணியில் பொலிசார் தீவிரமாக உள்ளனர். இதனிடையே, சிறைக்கைதிகளை சந்திக்க பெண்களுக்கு வழங்கப்படும் அளவு கடந்த சலுகைகளே கைதி தப்பியதற்கு முக்கிய காரணம் என சிறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE