பயிற்சிக்கு லேட்டா வந்தால் அபராதம். கும்ளே கண்டிப்பு

210

24-1466745010-anil-kumble

பயிற்சிக்கு லேட்டா வருவது அணியின் பேருந்தை தவற விடுவது போன்ற தவறுகளுக்கு ரூபாய் 3,400 வரை அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பளே பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ளே நியமிக்கப்பட்டார்.

தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

தொடர்ச்சியான போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களிடையே கட்டுப்பாடு நிறைந்த ஒழுக்கத்தை விதைத்து விட பயிற்சியாளர் கும்ளே திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, பயிற்சிக்கு லேட்டாக வந்தாலோ, டீம் பஸ்சை தவறவிட்டாலோ வீரர்களுக்கு 50 டொலர் அபாராதம் விதிக்கப்படும் என கட்டுப்பாடு விதித்துள்ளார்.

அதுபோல் ஒவ்வொரு 4 நாட்களுக்கும் ஒரு முறை, அணி வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அதேநேரம், வீரர்கள் சுதந்திரமாக இருக்கவும் கும்ளே அனுமதித்துள்ளார்.

SHARE