பல வருடங்களுக்குப் பின் மட்டக்களப்பு – காங்கேசன்துறை பஸ் சேவை ஆரம்பம்

206

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவு நேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது பஸ் பயணம் நேற்று இரவு 8.20 அளவில் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.

இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது 412 கி.மீ தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

மட்டு-யாழ் மக்களினதும், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், இசை நடன கல்லூரி, கல்வியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மட்டுவில் இருந்து காங்கேசன்துறை நோக்கி இரவு 8.20க்கும் காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்புக்கு இரவு 9.30க்கும் தனது சேவையை தொடர்கின்றது.

இந்த நிகழ்வுக்கு மாநகர ஆணையாளர் உதயகுமார் மற்றும் சாலை முகாமையாளர் எம் கிருஸ்ணராஜா, பிரதான பிராந்திய முகாமையாளர் எ .எல் சித்திக் மற்றும் சாலை அதிகாரிகள் சாரதிகள் நடத்துனர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

மிக நீண்ட காலமாக காங்கேசன்துறைக்கான பஸ்சேவை நடைபெறாதிருந்த நிலையில் தற்போது இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.bus-jaffna

bus-jaffna01

bus-jaffna02

SHARE