பழங்குடியினரின் தாக்குதலில் இருந்து தப்பிய பிரித்தானிய நடிகர் 

248
பப்புவா நியூ கினியா பகுதியில் சுற்றுலா சென்ற பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பழங்குடியினரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியா தொலைக்காட்சி நடிகரான Matthew Iovane என்பவர் தமது அமெரிக்க தோழியான Michelle உடன் விடுமுறையை கழிக்கும் பொருட்டு பப்புவா நியூ கினியா வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் வனத்தினை ஒட்டி வாழ்ந்து வரும் கிராம மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்கள் தரும் உணவினை உண்டு 5 நாட்கள் தங்கியுள்ளனர்.

ஆனால் 5 வது நாள் மாலையில் திடீரென்று இவர்கள் இருக்கும் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த 2 பழங்குடியினர் இவர்கள் இருவரையும் மிரட்டி கை கால்களை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

பழங்குடியினரின் பகுதிக்கு இட்டுச்சென்ற நடிகர் மற்றும் அவரது தோழியை மரத்தில் கட்டி வைத்து அந்த குழு கொடூரமாக தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

மேலும் இருவரது ஆடைகளை களைய வைத்து பின்னர் கத்தியாலும் தாக்கியுள்ளனர். மரத்தில் கட்டி வைத்து தொடர்ந்து தாக்கியதால் நடிகர் Iovane ஒரு கட்டத்தில் மூர்ச்சையாகி சரிந்துள்ளார்.

அதே நேரம் நடிகரின் தோழியின் விரல்களை கத்தியால் பிளந்துள்ளனர். இதனிடையே வனத்தின் உள்பகுதிக்கு இவர்களை கொண்டு செல்லும் வழியில் இருவரும் தப்பியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பியவர்களை காட்டு நாய்களை விட்டு அவர்கள் தாக்கியுள்ளனர், மேலும் விஷம் தோய்த்த அம்புகளாலும் தாக்கியுள்ளனர்.

ஒருவழியாக கிராம பகுதிக்கு வந்த இருவரையும் அப்பகுதி மக்கள் காப்பாற்றியுள்ளனர். பின்னர் பொலிசாருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகரின் தோழிக்கு மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது அதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக நடிகர் தெரிவித்துள்ளார்.

SHARE