பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுக்கு உடனடியாக நட்டயீடு -மின்சக்தி அமைச்சர் சியம்பலாபிட்டிய

184

கினிகத்தேன பொல்பிட்டியவில் புதிகாக நிர்மாணிக்கப்படும் போட்லெண்ட் நீர் மின்சார நிலையத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை 11.08.2016 வியாழக்கிழமை காலை சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

போட்லண்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் 37 குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து அனர்த்தம் காரணமாக வெளி யேற்றப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக மாதாந்தம் தலா 30000 ரூபாய் மின்சார சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட 37 குடியிருப்பாளர்களுக்கு வேறு இடங்களில் குடியமர விரைவில் அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்படும் என உறுதியளித்ததுடன் காசல்ரீ நீர்த்தேக்க பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திப்பின்போது கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித்த பெரேரா, நுவரெலிய மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, மஸ்கெலிய மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பளர் ரணசிங்க, அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamedunnamed (1)

SHARE