பாதுகாப்புச் செயலாளரை பணி நீக்குவது குறித்து கவனம்

288
பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்கவை பணி நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ்நாயக்கவின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய நிறைவேற்று பேரவைக் கூட்டத்தில் பஸ்நாயக்கவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரை பணியிலிருந்து நீக்குவது குறித்து தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட சில தரப்பினர் பஸ்நாயக்கவை பதவியிலிருந்து அகற்றுமாறு கோரியுள்ளனர்.

பதவிக்கு பொருத்தமான வகையில் அவரது செயற்பாடுகள் அமையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஊடாக பாதுகாப்புச் செயலாளர் அறிவித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்கவை பணி நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

SHARE