பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிர்கு நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்.. இதை தான் அப்பவே சொன்னாரா

40

 

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களிடம் இருந்து 16 லட்சம் வாக்குகளை பெற்ற அர்ச்சனா டைட்டில் வின்னராகி, பிக் பாஸ் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார்.

இதுவரை எந்த ஒரு வைல்டு கார்டு போட்டியாளரும் பிக் பாஸ் டைட்டில்வென்றது இல்லை. அர்ச்சனாவே முதல் போட்டியாளர் ஆவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்
இந்நிலையில் டாப் 5 போட்டியாளர்களின் ஒருவரான விஷ்ணு, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒரு விஷயத்தை கூறினார்.

தினேஷ், அர்ச்சனா, மணி இவர்கள் மூவரில் யார் வெற்றிபெற்றாலும் 10000 வாலா பட்டாசு வெடிப்பேன் என கூறியிருந்தார்.

அதன்படி, பிக் பாஸ் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவிற்காக தற்போது நடுத்தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார் விஷ்ணு. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சொன்னதை செஞ்சு விட்டாரே விஷ்ணு என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

SHARE