பிரதமர் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டார் – அமைச்சர் மகிந்த சமரசிங்க

225
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்காக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு திருத்தங்களையும் யோசனைகளையும் முன்வைத்த போது அவற்றை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுப்பு பிரதமர் நடந்து கொண்டதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

யோசனை சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் திருத்தங்களை முன்வைத்த போதிலும் அவற்றின் மூலம் கட்டமைப்பு ரீதியான எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மூலம் ஒன்றை ஸ்தாபிக்கும் விதம் அல்லது செயற்படுத்தும நடந்துள்ளதே அன்றி கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. இதன் ஊடாக நாட்டின் ஒற்றையாட்சிக்கோ, பௌத்த மதம் சம்பந்தமாகவே எந்த விதமான சிக்கலான நிலைமையும் ஏற்படாது என்றும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றும் வகையில் பிரதமர் முன்வைத்த யோசனை, அமைச்சரவையின் அனுமதியின்றி பிரதமரால் முன்வைக்கப்பட்டதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு திருத்தங்களையும் யோசனைகளையும் முன்வைத்தது என இரண்டு அமைச்சர்களும் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறியுள்ளனர்.

அமைச்சரவை அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தால், தமக்கும் அது சம்பந்தமான பொறுப்பை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Mahinda-Samarasinghe

SHARE