பிரான்ஸ் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை!

201

கோடை விடுமுறையின் இறுதி வாரத்தை நெருங்கிவிட்ட இந்நிலையில் வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் அனைத்து சாலைகளும் வாகன நெரிசலுக்கு உள்ளாக இருக்கிறது என போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

வீதி போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனமான Bison Smart வெளியிட்டுள்ள தகவலின் படி, ஓகஸ்ட் 26, 27, 28, ஆகிய திகதிகளில் அதிகப்படியான போக்கு வரத்து நெரிசல் நாடு முழுவதும் ஏற்படும். குறிப்பாக 27ம் திகதி சனிக்கிழமை மிக மோசமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய நாளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

லியோன் நகரை ஊடறுத்து செல்லும் சாலைகள் உட்சபட்சமாக வாகன நெரிசலுக்கு உள்ளாகும் என்றும், பொதுமக்கள் அச்சாலைகளை தவிர்க்கும் படியும் கோரப்பட்டுள்ளனர். மேலும் 26ம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 28 ஞாயிற்றுக்கிழமை செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

A7, A8, A9, A61, A63 ஆகிய சாலைகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தவிர்க்கும் படி மேலும் வலியுறுத்தப்படுகிறது.perans

SHARE