பிரித்தானியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரானார் போரிஸ் ஜான்சன்

198

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரெஸா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார்.

லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய நிதியமைச்சராக பிலிப் ஹேமண்டும், சர்வதேச வர்த்தக அமைச்சராக லியாம் ஃபாக்சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக விடயங்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் துறைக்கு டேவிட் டேவிஸ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

New Cabinet Ministers

Chancellor – Philip Hammond

Home Secretary – Amber Rudd

Foreign Secretary – Boris Johnson

Defence Secretary – Michael Fallon

Secretary of State for exiting the European Union – David Davis

International Trade Secretary – Liam Fox

SHARE