பிறருக்காகவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உயிரிழந்தார்! அமைச்சர் டிலான் பெரேரா

206

 

விருப்பு வாக்கு தேர்தல் முறை மக்களை கொலை செய்வதற்காகவே இருப்பதாக டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, விருப்பு வாக்கு முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போதே கொலை செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர பிறருக்கு விருப்பு வாக்கு சேகரிக்க சென்ற நிலையிலேயே கொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் அனைத்து தரப்பினரும் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை தினேஸ் குணவர்தன மற்றும் பிரதமர் ஆகியோர் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஒரே விதமான கருத்தை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாகவே கடந்த தேர்தலின் போது நாடாளுமன்றில் ஆசனங்கள் அதிகரிப்பது நிறுத்தப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

SHARE