பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை முடக்கிய “ஹேக்கர்கள்” : காரணம் என்ன?

271

 

புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய சேவைகளும் கடந்த வியாழனன்று மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டன.பிபிசியின் ஐபிளேயர் காணொளி சேவையும் வானொலி சேவைகளும் கூட இயங்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பலத்த முயற்சிகளுக்குபின் இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. தொழிற்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டதாக பி.பி.சி. தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தாங்கள்தான் பி.பி.சி.யின் இணைய பக்கத்தை முடக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான ஹேக்கர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

நியூ வோர்ல்ட் நியூஸ் டுடே என்ற அந்த அமைப்பு இது தொடர்பாக கூறியுள்ளதாவது, எங்களில் திறமையை சோதிப்பதற்காகவே பி.பி.சி.யின் இணையப்பக்கத்தை முடக்கினோம்.

எனினும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு இவ்வளவு நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், நாங்கள் செய்வது எப்போதும் சரி என்று கூறமுடியாது, அதேவேளையில் இணைய ஹேக்கர்கள் இல்லாமல் எவ்வாறு இணையவழி தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடுவது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுவாக இது போன்ற இணைய ஊடுருவல் ரஷ்யா அல்லது சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படும்.

எனவே இது அந்த நாட்டை சேர்ந்த்வர்களின் சதியாக இருக்கலாம் என்று சந்தேக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த் நியூ வோர்ல்ட் நியூஸ் டுடே இந்த

SHARE