பீட்சாவை திருமணம் செய்துகொண்ட இளம் பெண்: வைரலாகும் புகைப்படம்

173

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பீட்சா உணவு அதிகம் பிடிக்கும் என்பதால் அதனை திருமணம் செய்துள்ளது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர்(18).

பீட்சாவை அதிகம் விரும்பி சாப்பிடும் இவர், அதனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பாட்டியின் திருமண ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார்.

இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் மார்சி ஹாரிஸ், கிறிஸ்டினாவின் பண்ணை வீட்டில் வைத்து போட்டோஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SHARE