புகலிட கோரிக்கையாளர்களுக்கு சாதகமான பதில் கூறியுள்ள மேற்கு அவுஸ்திரேலியா!

194

boat-people-350x175

நவுறு புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலுள்ள குடும்பங்களை உள்வாங்க மேற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் முதல்வர் Colin Barnett இதனை தெரிவித்துள்ளார். கடல் கடந்த தடுப்பு முகாமிலுள்ள எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது முடிவினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் புகலிட கோரிக்கையாளர் குடும்பங்களை மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் குடியமர்த்த தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்ந்து வருவது கவலைக்குரிய விடயம் எனவும் Colin Barnett குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத குடும்பங்களை குடியமர்த்துவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE