புடலங்காயின் மருத்துவ குணங்கள்: இவர்கள் மட்டும் ஜாக்கிரதை

116

புடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவில் சேர்த்து கொள்ளும் புடலங்காய் கொத்துப்புடல் வகையைச் சேர்த்தது, மேலும் புடலங்காயில் இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது.

மருத்துவ பயன்கள்
  • புடலங்காயில் அதிக அளவு நார்சத்து உள்ளதால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் நார்சத்தானது ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவுகின்றது.
  • இதை கசாயம் வைத்து இரவில் குடிக்க தீராத காய்ச்சலால் பாதிக்கப்பட்டவகளின் காய்ச்சல் சரியாகும், சுவாச பாதையில் உள்ள சளியினை நீக்குகிறது.
  • புடலங்காயில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்தி வந்தால் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  • பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் கோளாறுகளைப் போக்கவும் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும்.
  • இதிலுள்ள அதிக அளவு நீர்ச்சத்து, உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
செய்யக்கூடாதவை
  • புடலங்காயின் விதைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம்.
  • புடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், புடலை வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
SHARE