புத்தாண்டு தினத்தில் 804 கார்களை எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில் பதற்றம்

271

 

பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 804 கார்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம், இஸ்லாமிய மத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

எனினும், அரசின் கவனத்தை ஈர்க்க புத்தாண்டு தின நாட்களில் வருடந்தோறும் போராட்டம் தீவிரப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தினத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதில், சுமார் 804 கார்களை போராட்டக்கார்கள் எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.

எனினும், 2014 மற்றும் 2015ம் ஆண்டில் நடைபெற்ற கார் எரிப்பு போராட்டத்தில் 940 கார்கள் எரிக்கப்பட்டதால், தற்போது இது 14.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக கார்களை எரிக்கும் சம்பவங்கள் அண்மை காலமாக பிரபலம் அடைந்து வருவது அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுபோன்ற போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களில் கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகமாக, அதாவது 622 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், ஒரே இரவில் 804 கார்களை போராட்டக்காரர்கள் எரித்த சம்பவத்தால் அந்நாட்டில் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது.

SHARE