புத்தாண்டு வாழ்த்துக்கள் செவ்வாயில் இருந்து

283

 

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் விண்வெளி பாதையில் சுமார் 10 மாதங்கள் பயணம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24–ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.

செவ்வாய் கிரகத்தை அந்த விண்கலம் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

காற்று மண்டலம், மீத்தேன் வாயு உள்ளிட்டவை குறித்து அந்த விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.

புத்தாண்டு தினமான நேற்று மங்கள்யான் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தி யுடன் செவ்வாய் கிரகத்தை முழு அளவில் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

அந்த படத்தில் சிவப்பு கோளம் போன்ற செவ் வாயின் வடபகுதியில் உறைபனி காணப்படு கிறது.

மங்கள்யான் அனுப்பிய வாழ்த்து செய்தியில் ’பூமி வாசிகளுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள். செவ்வாயின் வடதுருவம் பனி மூடியது போல் காணப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

மங்கள்யானின் இந்த தகவலைப் பார்த்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது நமக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றும் தெரிவித் தனர்.
மங்கள்யான் அனுப் பிய செவ்வாயின் படத்தை இஸ்ரோ தனது இணைய தளத்தில் வெளியிட் டுள் ளது. அதற்கு ஏராளமா னோர் விருப்பம் தெரிவித் துள்ளனர்.

SHARE