பெண்ணின் காதில் நுழைந்து வெளியே வரமுடியாமல் திணறிய பாம்பு அதிர்ச்சியடைந்த மருத்துவர்

137

அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காது துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு வெளியில் வரமுடியாமல் திணறியுள்ளது.

Oregon மாகாணத்தை சேர்ந்த Ashley Glawe என்பவர், Ball python என்ற பாம்பினை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அதனுடன் நாள்தோறும் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த பாம்பு இவரின் தலையில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தலையின் பக்கவாட்டு பகுதியாக கீழிறங்கி, காதில் காதணி அணியும் துவாரப்பகுதிக்குள் நுழைந்துவிட்டது.

பாதி உடம்பு உள்ளே சென்ற நிலையில், அந்த பாம்பு இடையில் மாட்டிக்கொண்டது. இதனை அறிந்த அப்பெண், அதனை மீட்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு, இவரது காதில் இருந்த பாம்பினை பார்த்த மருத்துவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளன. இப்படி ஒரு சிகிச்சையை நாங்கள் இதுவரை மேற்கொண்டதில்லை என கூறிய மருத்துவர், அவரை தனியாக ஒரு அறையில் அமர வைத்துள்ளார்.

அதன்பின்னர், String வைத்து அந்த பாம்பானது வெளியில் இழுத்து எடுக்கப்பட்டது. தனது காதில் பாம்பு மாட்டிக்கொண்ட புகைப்படத்தினை இப்பெண் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் 10,000 பேரால் லைக் செய்யப்பட்டு, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SHARE