பேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண்டுபிடிக்கலாம்

184

லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. பேஸ்புக் இன் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் பேஸ்புக் இன் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை பேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. பேஸ்புக் இன் சொந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அல்லது FAIR அமைப்பு டீப் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்து அதிநவீன சென்சார்கள், இயற்கை குரல் செயலாக்கம் மற்றும் இதர துணை பிரிவுகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த பிரிவுக்கென பேஸ்புக் அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வார்த்தைகளை மிக துல்லியமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாக்க வேண்டும் என்பதே பேஸ்புக் நிறுவனத்தின் இலக்காக இருக்கிறமை குறிப்பிடதக்கது.

SHARE