பொதுத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இன்றுபோல் என்றும் ரணிலே இந்நாட்டின் பிரதமராக இருப்பார்

270

 

 

எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இன்றுபோல் என்றும் ரணிலே இந்நாட்டின் பிரதமராக இருப்பார் என வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா இந்நாட்டின் அடுத்த பிரதமராகும் கனவில் இருக்கிறார் எனவும் அவரது கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை எனவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “”தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பகலில் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் இரவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.

Sajith-Premadasa

அவர் காரணமே இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்” – என்றார். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா நிலையியல் சட்டம் 23 (2) இன் கீழ் சமுர்த்தி நிவாரணம் தொடர்பில் வெளியிட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாது கூறியுள்ளார். சமுர்த்தி நிவாரணம் சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கொன்று இருப்பதால் நாடாளுமன்ற நிலையியல் சட்டத்தின் கீழ் அது பற்றி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

SHARE