பொருளாதார குற்ற புலனாய்வு படம் 

513




1990 முதல் 2014ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடந்த பொருளாதார குற்றம் மற்றும் புலனாய்வு பற்றிய கதையாக உருவாகிறது உறுமீன். சிம்ஹா, காளி, ஆராதனா உள்பட பலர் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி கூறும்போது, தமிழ் நாட்டில் நடந்த பொருளாதார குற்ற புலனாய்வுகளை திரைக்கதையாக அமைத்து உண்மை சம்பவம் பின்னணியை மையமாக வைத்து ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகிறது. எல்.சிவபாலன் தயாரிக்கிறார். சென்னை, புதுச்சேரி, கோவை, ஐதராபாத், பெங்களூரில் ஷூட்டிங் நடக்கிறது என்றார்

 

SHARE