பொருளாதார மத்திய மையம் தொடர்பாக முதியவரின் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்!

371

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் (வயது 73) மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்து.

625.0.560.320.160.600.053.800.668.160.90

எனினும், இத்தெரிவு தொடர்பாக இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ளனர்.

ஆனால், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயியான தா.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

ஓமந்தை பிரதேசசபை கட்டிடத்திற்கு முன்னால் தொடர்ந்தும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் பலரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளவரின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தை வைத்தியசாலை வைத்திய அதிகாரி செ.மதுரகன் வருகைத்தந்து பார்வையிட்டார்.

 

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

“2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், 21 பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் முடிவின் படி ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஓமந்தையை விடுத்து வேறு இடத்தில் அமைக்கப்படுமாக இருந்தால் தான் இறந்த பின்தான் அது நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கையையும், எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் முதலமைச்சர் கூட கைவிட்டு விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

SHARE