போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விசேட வீடமைப்பு திட்டம்

273
போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்பு திட்டமொன்றை இராணுவம் அறிமுகம் செய்ய  உள்ளது.

போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். போரில் உயிரிழந்த படைவீரர்களின் சில குடும்பங்களுக்கு இதுவரையில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.

அவ்வாறான குடும்பங்கள் குறித்து கண்டறிந்து துரித கதியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளது. உயிரிழந்த படைவீரர் கடமையாற்றிய படைப் பிரிவு வீடுகளை அமைப்பதற்கு 75 வீத பங்களிப்பினை வழங்கும் எனவும் மிகுதி 25 வீதத்தை உயிரிழந்த படைவீரரின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

SHARE