போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் ரணில்

258

 

வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின்போது வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு பதில் உரை வழங்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதியை வழங்கினார்.

வடக்கில் இன்னும் இராணுவ பிரசன்னம் இருப்பதாகவும் காணிவிடயங்களில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை என்று விக்னேஸ்வரன் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் தமது உரையில் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் குற்றம் காணப்படுபவர்கள் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிட்டார்.

வடக்கில் தொடர்ந்தும் படையினரால் கையகப்படு;த்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.

இந்த அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரணில் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கில் தேவை க்கேற்றவகையில் இராணுவ முகாம்களும் படையினரும் தீர்மானிக்கப்படுவர் என்று ரணில் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிந்துக்கொள்ள இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டார்.

SHARE