போர்த்துகல் தான் சாம்பியன்! முன்கூட்டியே கணித்த குரங்கு

208

யூரோ கிண்ணம் 2016 கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று போர்த்துகல் அணி வரலாறு படைத்துள்ளது.

பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.

தொடக்கம் முதலே அனல் பறந்த இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்திய போர்த்துக்கல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டம் என்பதால் எப்படியாது கிண்ணத்தை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் இருந்த பிரான்ஸ் வீரர்களுக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் இது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், யூரோ கால்பந்தாட்டத்தில் வெற்றிபெறப்போவது போர்த்துகல் அணி தான் என குரங்கு கணித்தது தற்போது உண்மையாகிவிட்டது.

போட்டி தொடங்குவதற்கு முன்னர், வலது பக்கத்தில் போர்த்துகல் நாட்டின் கொடியும், இடது பக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் கொடியும் வைக்கப்பட்டது,

இந்த கொடிகளுக்கு மேல் வாழைப்பழ குலையும் வைக்கப்பட்டிருந்தது, இதில் குரங்கு எந்த கொடியின் மீது உள்ள வாழைப்பழத்தை சாப்பிடுகிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும் என கருதப்பட்டது.

அதன்படியே, விரைந்து வந்த குரங்கு போர்த்துகல் நாட்டின் கொடியின் மீதிருந்த வாழைப்பழத்தினை எடுத்து சாப்பிட்டது.

ஆக மொத்தத்தில், யூரோ 2016 கிண்ணத்தை கைப்பற்றப்போவது போர்த்துகல் அணிதான் என குரங்கு கணித்தது தற்போது உண்மையாகிவிட்டது.

SHARE