‘போர் தவிர்ப்பு வலயம்’ வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரை விடுவித்தது மலேசிய நீதிமன்றம்

260

சிறிலங்கா போர் தொடர்பான “போர் தவிர்ப்பு வலயம்” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட மனித உரித ஆர்வலர் லீனா ஹென்றி மலேசிய நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை தணிக்கைச் சபையின் அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி லீனா ஹென்றிக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு மலேசிய காவல்துறையினர் திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மைகளை வழக்குத் தொடுனர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டதாக, மலேசிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் லீனா ஹென்றி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய நீதிமன்றத்தின் தீர்ப்பை லீனா ஹென்றியும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் பில் ரொபேட்சனும் வரவேற்றுள்ளனர்.
Activist-Lena-Hendry

SHARE