மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப் போட்டியிடும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது.

279

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப் போட்டியிடும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது.

mahinda1

நேற்று இந்த அணியினர், வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியை அமைப்பது குறித்து மகிந்த ராஜபக்ச இன்று முடிவை அறிவிக்கலாம் என்றும், நாளையும் நாளை மறுநாளும், நடத்தும் ஆலோசனைகளை அடுத்து, வேட்பாளர் பட்டியலை அவர் இறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பியசிறி விஜேநாயக்கவை செயலாளராக்க் கொண்ட, தேசப்பற்று தேசிய முன்னணி என்ற கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு வசதியாக ஏற்கனவே இந்தக் கட்சியின் பெயர், சிறிலங்கா தேசிய சக்தி என்று பெயர் மாற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், சிறிலங்கா தேசிய சக்தி கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது என்று மெதமுலானவில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது என்று பியசிறி விஜேநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

SHARE