மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

19

 

பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் மேலும் எட்டு நிதி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் (22.04.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கு கிடைத்த முறைப்பாடுகளின்படி, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(c) பிரிவை மீறி தடை செய்யப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தண்டனைக்குரிய குற்றம்
விசாரணை அறிக்கைகளின்படி, எட்டு வங்கிச் சட்டத்தின் பிரிவு 83(c)ஐ மீறி நிறுவனங்கள் செயல்பட்டதாக மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

மேலும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

SHARE