மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பும் அரசியல் வாதிகளின் மௌனமும்..!

169

மன்னார்-யாழ் பிரதான வீதி தள்ளாடி விமான ஓடுபாதைக்கு முன் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலையொன்று விசமிகளால் உடைக்கப்பட்டிருந்த நிலையில் மன்னாரில் இருக்கக் கூடிய தமிழ் அரசியல் வாதிகள் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தினைத் தளுவியிருப்பதனாலும், அப்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கிருஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் இச் செய்தியானது பாரியளவில் கொண்டு செல்லப்படவில்லை. பழமை வாய்ந்த இந்து மதத்தினுடைய சிலைகளை உடைப்பது என்பது அப்பகுதியில் பெரும்பாண்மையான கிறிஸ்தவர்கள் வாழ்வதென்பதால் இவர்களுடைய அத்துமீறலான செயற்பாடாகவே காணமுடிகின்றது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ், மாகாணசபை முன்னால் அமைச்சர் டெனீஸ்வரன், தற்போதைய அமைச்சர் குணசீலன் இன்னும் பல மாகாணசபை உறுப்பினர்களும் மன்னார் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை. மன்னாரில் இதற்கு முன்னரும் மாத சுருவங்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் மாறி மாறி கிறிஸ்த்தவம் சைவம் வன்முறைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலமை தொடர்ந்து செல்லுமாக இருந்தால் மத ரீதியான பிரச்சனைகள் பாரியளவில் உருவாக்கப்பட்டு இதனை அரசாங்கம் தமது அரசியலுக்காகப் பயண்படுத்தும். இதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களும், ஏனைய கிறிஸ்த்தவ மதத் தலைவர்களும் மௌனம் சாதித்திருப்பது என்பது இறையான்மை உள்ள ஒரு நாட்டின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்த்தவ சமூதாயத்திற்கு ஒரு பிரச்சனை வருகின்ற பொழுது அதனை வர்த்திக்கான் வரை எடுத்துச் செல்லுகின்ற இந்த மன்னார் மாவட்ட மறைமாவட்ட ஆயர் இந்துக்களின் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் மௌனம் சாதித்திருப்பது கவலையளிக்கின்றது. கிறிஸ்த்தவ மதத்தின் தோற்றப்படு என்பதும் சைவ மாதத்தின் தோற்றப்படு என்பதும் பாரியளவில் வித்தியாசம் இருக்கின்றது. எந்த மதங்களாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையே போதிக்க வேண்டும். கிறிஸ்த்தவம், சைவம், புத்தம் என்றும் வேறு மதங்கள் என்றும் பிரிவினைகளை உண்டு படுத்தக் கூடாது ஒருவனுக்கு இறைவனால் கிடைக்கக் கூடிய பலாபலன்களை அடுத்த அந்தந்தக் கடவுளில் அவன் பற்று வைக்கின்றான். எந்தவொரு நாட்டில் மதவாதம் தலை தூக்குகின்றது. அந்த நாடு உருப்பட்டதாக வரலாறு இல்லை. யுத்தம் நிறைவுக்குப் பின்னர் வடபகுதிகளில் மட்டும் 225 புத்த கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்கக் கூடாது என்று எந்தவொரு அமைப்பாவது தடையுத்தரவை பிறப்பித்துள்ளீர்களா? இல்லை. இராணுவ முகாம்களின் அருகிலும், அரசமரங்கள் உள்ள இடங்களிலும் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது. சிங்களவருடன் நேரடியாக மோதத் துப்பில்லாத கிறிஸ்தவ சமூதாயம் சிலையுடைப்பு வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றது கவலையளிக்கின்றது. இதற்கு உடந்தையாக மன்னார் மாவட்டத்தில் பிரதிபளிக்கின்ற அரசியல் வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். எந்தவொரு தனி நபரும் சுதந்திரமாக இறைவனை வழிபடுவதற்கு இந்த நாட்டில் உரிமையிருக்கின்றது.


குறிப்பாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களை எடுத்துக் கொண்டால் சிங்களவர்களுடைய பண்டிகைகள் வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டுவருகின்றது. விசாக் பண்டிகையின் போது வடபகுதியே புத்த மதக் கலாச்சாரமாக காட்சியளித்தது. சைவமக்களின் பண்டிகையை அல்லது கிறிஸ்தவர்களின் பண்டிகையை சிங்கள மாவட்டங்களில் சென்று செய்துவிட்டு உங்களால் திரும்பி வரமுடியுமா? குறிப்பாக வவுனியாவில் இருக்கக் கூடிய புத்தர் சிலைகள் அத்துமீறி அமைக்கப்பட்டிருகின்றது. எமது தமிழ் இனத்தை அழைத்த டென்சில் கொப்பேக்கடுவாவின் சிலை நகரப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது.
பள்ளி வாசல்கள் சட்டத்துக்கு அமைவாக இல்லாது அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்துக்கோவில்கள் அமைக்கின்ற போது அந்தச் சிலைகளை உடைப்பதும் வீதியிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஆன நிகழ்வுகள் அரங்கேறி வருவதன் பின்னணியில் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. புத்தசிலைகள் நிறுவப்படுவதை இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வடபகுதியில் அதிகரிப்பதை தடுக்க முன்வரவேண்டும். தமிழ் பேசும் மக்களே கிறிஸ்தவர்களாகவும், இந்துக்களாகவும் இருக்கின்றார்கள். கோவில்களோ, ஆலயங்களோ அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுதல் வேண்டும். புத்தசாசன அமைச்சிடம் அனுமதி கோரவேண்டிய நிலை இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமாக இருந்தால் யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள 225 புத்த வணக்கஸ் தலத்துக்கும் அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
குறிப்பாக மன்னாரில் எழுந்து நிற்கின்ற சைவம் கிறிஸ்தவம் பிரச்சனைக்கு இந்த அரசியல் வாதிகள் முன்வரவேண்டும். பிள்ளைகளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகின்ற நடவடிக்கையை இந்த அரசியல் வதிகள் தமது அரசியல் பிழைப்புக்காக மேற்கொண்டு வருகின்றார்கள். வவுனியாவில் இருக்கக் கூடிய ஒரு சில அரசியல் வாதிகள் மன்னாரில் இந்துக்களுக்கு நடக்கின்ற பிரச்சனைகளை கண்டிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியபோது அவை அனைத்தும் மளுங்கடிக்கப்பட்டுவிட்டது. மதச் சுதந்திரம் என்பது இந்த நாட்டில் அரசியல் அமைப்பின் படி சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதனை நாம் சரியான முறையில் குரல் கொடுக்கவேண்டும். இதனுடைய எதிர் தாக்கங்கள் ஏனைய பகுதிகளிலும் இருக்கக் கூடிய மாத சுருவங்கள் இந்துக்கள் உடைய சிலைகளும் உடைக்கப்படும் அபாய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புத்தசாசன நாடு என சிங்களவர்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு சாதகமாக எமது தமிழ் மக்கள் செற்படக் கூடாது. விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலப்பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பலமை வாய்ந்த புத்தகோவில்கள் இருப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தனர் அவர்கள் அதனை நிர்மூலமாக்கவில்லை. இனரீதியாக நாம் பிளவு பட்டாலும் மதரீதியாக இணைக்கப்பட்டோம் என்ற மனிதாபிமான செயற்பாடாகவே இச் சம்பவம் அமையப்பெறுகின்றது. ஆகவே இந்துமத அமைச்சுக்கள் இந்துமதத் தலைவர்கள் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஒன்றினைந்து சிலையுடைப்பு விவகாரங்களில் தலையிட்டு அதனுடைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையேல் கிறிஸ்;த்தவர் இந்து பிரச்சனைகள் வடபகுதியில் தோற்றுவிப்பதை எம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். தமிழ் பேசும் மக்களாகிய நாம் சிங்களக் குடியேற்றம் அத்துமீறிய புத்தசிலைகள், காணி அபகரிப்பு, சிங்கள இராணுவத்தின் விடுதிகள், கடைகள் போன்ற அபகரிப்புக்கு எதிராகவே நாம் போராடவேண்டும். கிறிஸ்தவமோ, இந்துவோ எதிர்த்து போராடுவது என்பது மடமைத்தனமானது. ஆகவே தமிழ் பேசும் அரசியல் வாதிகள் உடனடியாக இவ் விவகாரத்தை அராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் நீங்களும் இச் செயற்பாட்டுக்குத் துணைபோவதாகவே கடுதப்படுவீர்கள்.
மதம் என்பது ஒருவரை நல்வழிப் படுத்துவதற்கேயொளிய தீயவழியை பின்பற்றுவதுக்கு அல்ல. கிருபானந்தவாரியார் கூறியது போன்று “நீற்றைப் புனைந்தென்ன நீராடித் திரிந்தென்ற உள்ளக்கமளமடி உத்தமனார் வேண்டுவது”. உள்ளத்தின் தூய்மையையே இவ்விடயம் எடுத்துக் காட்டுகின்றது. மதரீதியான வாத பிரதிவாதங்கள் இருக்கலாம் ஆனால் அதுவே வண்முறையாக தோற்றம் பெறக் கூடாது அதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அரசியல் வாதிகள் ஆராய்ந்து மீண்டும் இச் சிலையுடைப்பு விவகாரங்கள் தோற்றம் பெறாமல் தமிழ் இனம் ஒன்று பட்டு வாழ வழியமைக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

SHARE