மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் இறந்துவிட்டதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது – ஆயர் இல்லம் உறுதிப்படுத்தியுள்ளது.

252

தவறான செய்திகளை வெளியிடுவதன் ஊடாக மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை தோற்றுவிப்பது மட்டுமல்லாது விசமத்தனமான நடவடிக்கைகளிலும் சில இணையத்தளங்கள் செயற்படுவது நிறுத்தப்படவேண்டும். மன்னார் ஆயரைப் பொறுத்தவரை தமிழ் தேசிய அரங்கில் இருந்து என்றும் நீக்க முடியாத மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை இக்கட்டான கால சூழ் நிலையிலும் மதம் கடந்து இன விடுதலைக்காக தனது ஆயர் பணிக்காலத்தில் அதிகமான நேரத்தை தமிழ்தேசிய விடிவுக்காக உண்மையுடனும் நேர்மையுடனும் சத்தியதுடனும் உன்னதமான முறையிலும் பணியாற்றினார் என்பது யாம் அனைவரும் அறிந்ததே இவ்வேளையில் ஆட்சியில் அமந்திருந்த ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து விடாது தமிழரின் தனித்துவத்தையும் இனத்தின் உண்மைத்தன்மையையும் கடல் கடந்து வெளியுலகின் கவனத்துக்கு கொண்டுவந்த மாமனிதர் ஆவர். 

இவர் ஆயர் நிலையில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகிய சரித்திர நாயகன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனுக்கு அடுத்ததாக இனவிடுதலை என்பதற்காக உண்மையாக குரல் கொடுத்த இனவிடுதலை போராளி என்பது நிதர்சனமான உண்மை.உங்களோடு நான் சேர்ந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாக மனித உரிமைக்காகவும் தமிழின விடிவுக்காகவும் பல நிலைகளில் உங்களுடன் பணியாற்றியதை என் வாழிவில் நான் பெற்ற பெரும் பேறாக பெருமிதம் கொள்கிறேன் உங்களின் நீதியின் குரல் ஓய்ந்துவிட கூடாது என்றே ஏங்குகின்றோம். தமிழினத்தின் வரலாறு உங்களை மறந்து விடவும் முடியாது மழுங்கடிக்கவும் முடியாது என்பதே யாதர்த்தமான உண்மை.

images

SHARE