மயிரிழையில் உயிர்தப்பிய ரொனால்டினோ

254
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ சென்ற காரின் முன்னால் துருப்பிடித்த சிக்னல் கம்பம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் 5ம் திகதி தொடங்கவுள்ள இந்த தொடருக்கு ரொனால்டினோ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று முன்தினம் காலை கொச்சின் விமான நிலையத்திற்கு வந்த ரொனால்டினோ அங்கிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் கோழிக்கோடு வந்தார்.

கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் அவரை காண அங்கு குவிந்தனர்.

இந்நிலையில் நேற்று கோழிக்கோடு நகரிலுள்ள அரசுப்பள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரொனால்டினோ, பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ அவர் தங்கியுள்ள ஹொட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் ஒரு பிரதான சந்திப்பை கடந்த போது, ரொனால்டினோவின் காருக்கு முன்னால் இருந்த துருப்பிடித்த சிக்னல் கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.

ரொனால்டினோவின் கார் வேகமாக அந்த இடத்தை கடந்த போதிலும், சுதாரித்து கொண்ட காரின் ஓட்டுநர், அவசரமாக பிரேக் போட்டு காரை நிறுத்தி விட்டார்.

ரொனால்டினோவின் கார் ஓட்டுநர் சுதாரிப்புடன் செயல்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுவிட்டதாக நாக்ஜீ கால்பந்து தொடர் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE